ஈரோட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி

ஈரோட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது.

Update: 2022-06-26 21:02 GMT

ஈரோடு

ஈரோடு மாவட்ட ஹீக்கோவாஷி கராத்தே டே சங்கம் சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க துணைச்செயலாளர் பெ.ஆனந்தன் தலைமை தாங்கினார். உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். தொழில் அதிபர் இமயம் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் மனோஜ்குமார் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் 5 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வயது வாரியாகவும், அதற்கு மேல் உள்ள வயதினருக்கு பொதுப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

தனிநபர் சண்டை, குழு சண்டை, தனிநபர் கட்டா, குழு கட்டா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில் தொழில் அதிபர் தங்கம் தமிழரசு, சி.எஸ்.ஐ. நினைவாலயத்தின் செயலாளர் ராஜேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். இதில் முதல் பரிசு பெற்ற வீரர் ஒருவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. விழாவில் வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், பயிற்சியாளர்கள் சரவணன், சுரேஷ், கே.செங்கோட்டையன், கே.தினேஷ் மற்றும் வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்