உயர்த்தப்பட்ட தீருதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயர்த்தப்பட்ட தீருதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுது.

Update: 2023-04-24 19:03 GMT

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த பிச்சைபிள்ளை தலைமையில் மொத்தம் 15 பேர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடந்த 2007-ம் ஆண்டு பெரம்பலூர் அருகே க.எறையூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் வேலைக்கு வந்த எங்கள் 15 பேரை 3 பேர் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியதோடு வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தும், கோர்ட்டு மூலம் அவர்களுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தனர். பாதிக்கப்பட்ட எங்களுக்கு மாநில அரசு தீருதவித் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. எனவே எங்களுக்கு உயர்த்தப்பட்ட தீருதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்