சுற்றுலா பயணிகள் காப்புக்காட்டிற்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியை தவிர்த்து சுற்றுலா பயணிகள் காப்புக்காட்டிற்குள் நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-14 17:51 GMT

திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை யொட்டி ஏலகிரிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் குரங்குகள் மற்றும் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கக்கூடாது. வாகனம் செல்லும் சாலையினை தவிர்த்து பிற பகுதிகளுக்குள் செல்லக்கூடாது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்லும் நபர்கள், நீர்வீழ்ச்சி தவிர்த்து காப்புக்காடு பகுதிகளில் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்