உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்;

Update:2023-03-21 15:53 IST

திருப்பூர், மார்ச்.22-

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற http://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவ-மாணவிகள் அட்டைகளின் மூலம் பெறப்பட்ட சாதிச்சான்றிதழை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்