அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சோ்க்கை

சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித் துள்ளார்.;

Update:2023-06-17 00:15 IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு தொழிற்பயிற்சி நிலையம்

சின்னசேலம் வானக்கொட்டாய் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சி நிலையத்தில் சேர 8,10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பிட்டர், எல்க்ட்ரீசியன், கம்மியர், மோட்டார் வண்டி ஆகிய பாடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், கம்பியாள், வெல்டர் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 14 ஆகவும், அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். மாதாந்திர கல்வி உதவித்தொகை ரூ.750, விலையில்லா சீருடை, காலணி, விலையில்லா தொழிற்பிரிவு பாடப்புத்தகங்கள் மற்றும் வரைப்பட கருவிகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் தகுதியுள்ள பயிற்சியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, அரசு பேருந்தில் கட்டணமில்லா பஸ் பாஸ் வசதி, பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் தொழிற்சான்றிதழ் பெற்றுத்தரப்படும். சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மற்றும் சுய தொழிலாகவும் வேலைவாய்ப்பினை பெறலாம். மாநில அளவில் முதன்மையாக வரும் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு சான்றிதழுடன் ரொக்கப்பரிசு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in. என்ற இணையத்தின் மூலமாகவோ அல்லது சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9786377982 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்