கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

தஞ்சை அருகே நண்பர்களுடன் குளித்தபோது கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-27 19:58 GMT

தஞ்சை அருகே நண்பர்களுடன் குளித்தபோது கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரை சேர்ந்தவர் சையது முகமது கனி. இவரது மகன் அப்துல் ரசாக்(வயது 18). இவர், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று அப்துல் ரசாக் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து தஞ்சை அருகே குருவாடிப்பட்டி புது ஆறு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.

கிணற்றில் மூழ்கி பலி

அப்போது அப்துல் ரசாக் மற்றும் அவருடைய நண்பரும் சேர்ந்து குளிப்பதற்காக கிணற்றுக்குள் குதித்தனர். இவர்களுடன் வந்த மற்றொரு நண்பர் கிணற்றில் குதிக்காமல் மேலேயே நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கிணற்றுக்குள் குதித்த அப்துல் ரசாக் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் குளித்த மற்றொரு நண்பர் உயிர் தப்பினார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் வல்லம் போலீசார் அங்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து அப்துல் ரசாக்கின் உடலை மீட்டனர்.

தஞ்சை அருகே நண்பர்களுடன் குளித்தபோது கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவருடைய உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பலியான அப்துல் ரசாக்கின் தந்தை சையது முகமது கனி கொடுத்த புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்