பிளாஸ்டிக் பயன்படுத்துவதை ஒழிக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி

பிளாஸ்டிக் பயன்படுத்துவதை ஒழிக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது

Update: 2022-06-15 19:09 GMT

திருச்சி, ஜூன்.16-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை ஒழிக்க மாணவர்களிடம் இருந்து மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும், பொதுமக்களிடம் இருந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்காகவும் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்மேயர் அன்பழகன் பேசும்போது, மாநகர மக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து மாநகராட்சி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களிடமிருந்து மாற்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளி தொடங்கும் முன் தினந்தோறும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான உறுதிமொழி தலைமை ஆசிரியர்களுடன் மாணவ, மாணவிகள் எடுக்கவேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்