யோகாசன போட்டியில் மாணவர்கள் சாதனை

சென்னையில் நடைபெற்ற யோகாசன போட்டியில் பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-06-30 18:45 GMT

பனவடலிசத்திரம்:

காஞ்சிபுரம் மகாயோகம் பவுண்டேஷன் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ.விளையாட்டு கல்வியியல் துறை மைதானத்தில் 1000 மாணவர்கள் யோகாசனத்தில் பங்கு பெற்று வீரபுத்திர ஆசனம் கட்டா ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்தனர்.

இதில் நெல்லை மண்டல அளவில் பனவடலிசத்திரம், சங்கரன்கோவில், நெல்லை, கூடங்குளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 83 மாணவர்கள் கலந்துகொண்டு உலக சாதனை படைத்தனர். பனவடலிசத்திரம் பகுதிகளை சேர்ந்த வருஷாத், லட்சுமிதேவி, மதிவதினி, மெர்லின், பிரித்திஷ், கனிஷ்ஆதவன், பிரகின், மாதேஷ், அல்லித்துரை, முருகன் அனந்தகிருஷ்ணன், பூமிகா பாலகார்த்திக் ஆகிய மாணவர்கள் உட்பட 43 பேர் உலக சாதனை படைத்து கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற புத்தகத்தில் இடம்பெற்று உலகம் சாதனை படைத்தனர்.

மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார், உலக சாதனை பார்வையாளர் மனிஷ் நொய், மகாயோகம் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ்ரிஷி ரஞ்சனாரிஷி, பயிற்சி மாஸ்டர்ஸ் வினோத் குமார் ராஜ்குமார் ஆகியோர் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினர். சாதனை படைத்த பனவடலிசத்திரம் பகுதி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்