விஞ்ஞானிகளை பாராட்டி மாணவ-மாணவிகள் ஊர்வலம்

விஞ்ஞானிகளை பாராட்டி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-08-24 22:07 GMT

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கியது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக திருச்சி தேசிய கல்லூரி சார்பில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கி.குமார் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேசிய கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சுழற்சங்க மாணவர்கள் உள்பட 500 மாணவ-மாணவிகள் தேசியக்கொடியை கையில் ஏந்தி சென்றனர். கல்லூரி துணை முதல்வர் பிரசன்னபாலாஜி ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் இளவரசு மற்றும் பேராசிரியர்கள் ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்