மாணவர்கள் போராட்டம்

மணல்மேடு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-17 17:03 GMT

மணல்மேடு;

மணல்மேட்டில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு மணல்மேடு, பந்தநல்லூர், திருப்பனந்தாள், வைத்தீஸ்வரன்கோயில் மயிலாடுதுறை உள்ளி்ட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் வருகின்றனர். இந்தநிலையில். சீர்காழி முதல் மணல்மேடு வழியாக கும்பகோணம் வரை கூடுதல் பஸ் இயக்க வேண்டும், கல்லூரி அருகே உள்ள பஞ்சாலை பகுதியில் பஸ்சை நிறுத்தக்கோரியும் நேற்று காலை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200-க்கும்மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். பின்னர் மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்