'கல்வியுடன் தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
குழந்தைகளின் திறமையை தமிழக அரசு அங்கீகரிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை,
அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட வினாடி வினா, கட்டுரை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு தமிழக அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்நிலையில் அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று சந்தித்து பயண வழிமுறைகளை விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணவர்கள் தங்கள் பள்ளிக்கல்வியுடன் சேர்த்து தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் திறமையை தமிழக அரசு அங்கீகரிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது" என்று தெரிவித்தார்.