எடப்பாடி:
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், பகல் நேரங்களில் கோடை காலத்தை போல் வெப்ப அலை வீசி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென கனமழை கொட்டியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வெளியூர் செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் நீண்ட நேர மின்தடை ஏற்பட்டது. எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரி வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட இடைவெளிக்கு பின் கனமழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.