சேலம் தாதகாப்பட்டியில் கட்டிட தொழிலாளி தற்கொலை

சேலம் தாதகாப்பட்டியில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-07-10 01:20 IST

அன்னதானப்பட்டி

சேலம் தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ஹரிபிரசாத் (வயது 20). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு நள்ளிரவு ஹரி மீண்டும் வீடு திரும்பினார். தொடர்ந்து தனது அறைக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் நேற்று விரைந்து சென்று ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்