சித்தேரி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

Update:2023-07-28 00:30 IST

அரூர்:

தர்மபுரி மாவட்டம் சித்தேரி அருகே உள்ள கல்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 27). இவருடைய கணவர் திருப்பதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருப்பதி திருப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். தோட்ட வேலை செய்வது மற்றும் மாடு மேய்ப்பது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோகிலா வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கோகிலா ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்