சூளகிரி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
சூளகிரி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை;
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஜோதி (வயது 30). இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜோதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.