அதிக சத்தத்துடன் திருச்சியை சுற்றி வந்த விமானம்

அதிக சத்தத்துடன் விமானம் திருச்சியை சுற்றி வந்தது.;

Update:2022-05-20 03:31 IST

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் அரக்கோணம் மற்றும் தஞ்சையில் இருந்து ராணுவ விமானங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக அரக்கோணம் விமான நிலையத்தில் இருந்து சுகோய் விமானம் மூலம் திருச்சிக்கு வந்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் இந்த விமானம் திருச்சி மாநகரில் அதிக ஒலி எழுப்பி சுற்றி வந்தது. திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளை அந்த விமானம் சுற்றி வந்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி நேற்றுடன் நிறைவுபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்