நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கடலூரில் நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-11-23 19:52 GMT

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்வதற்காக நேற்று கடலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன. அதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? எரிபொருள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா? வாகனங்களில் கூம்பு வடிவ பிரதிபலிப்பான்கள், இருளில் ஒளிரும் அங்கி, சர்ச் லைட், விபத்தை தடுக்க பயன்படுத்தும் பிரதிபலிப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்களின் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், வாகன பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்