ஊரக வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
கழுகுமலை அருகே கரடிகுளம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.;
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சிறப்பு பஞ்சாயத்தாக தேர்வு செய்து அரசின் தேசிய விருது வழங்குவதற்காக கிராமத்தை பார்வையிட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தலைமை பொறியாளர் குற்றாலிங்கம் கரடிகுளம் கிராமத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அவரை கரடிகுளம் பஞ்சாயத்து தலைவர் ஜெயசுந்தரி தங்கவேலு சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து தலைமை பொறியாளர் குற்றாலிங்கம் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தி வரும் சோலார் மின் இணைப்புகள், கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி வரும் பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை பார்வையிட்டு அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டினார்.
இந்த ஆய்வில் உதவி இயக்குனர் உலகநாதன், கோவில்பட்டி செயற்பொறியாளர் சிவராணி, உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், பானு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஓவர்சீயர் சிவன்ராஜ், என்ஜினீயர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.