விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மமான முறையில் இறந்தார். அவரின் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update:2023-10-27 03:00 IST

பனமரத்துப்பட்டி:

மல்லூர் அருகே எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 39), விவசாயியான இவர் நேற்று இரவு 8 மணி அளவில் வாழகுட்டப்பட்டி பகுதியில் ஆனைப்பாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மல்லூர் போலீசார் விரைந்து சென்று முத்துராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்