அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில்பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது;

Update:2023-09-03 02:23 IST

அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு ஊராட்சி தலைவர் தனபாக்கியம் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட ெபாதுமக்கள், சுய உதவி குழுவினர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். விழிப்புணர்வு கோஷங்களும் எழுப்பப்பட்டன. துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டன.

ஊர்வலத்தின்போது தமிழ்நாடு மகளிர் திட்ட பயிற்சி அதிகாரி வீரமணி, ஈரோடு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சம்பத், ஒருங்கிணைப்பாளர் குணசக்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி உள்ளிட்டோரும் உடன் சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி தலைவர் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்