வளர்ச்சி பணிகளை தாட்கோ தலைவர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை தாட்கோ தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-19 19:31 GMT

வேப்பந்தட்டை:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக(தாட்கோ) தலைவர் மதிவாணன், வேப்பந்தட்டை பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். இதில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்காக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மலையாளப்பட்டியில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் வழங்கப்படும் உணவுகள் குறித்து மாணவ- மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கி, விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார். பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்