தாலுகா அலுவலகம், ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம், ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-06 19:07 GMT

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் ரேஷன் கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகள், நாட்டறம்பள்ளி கற்பகம் கூட்டுறவு நியாய விலைக்கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியிலும் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு சுத்தமாகவும், தரமாகவும் உணவினை தயார்செய்து வழங்க வேண்டும் எனவும், விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.

தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பதிவேடு, இ-ஆபிஸ் பணிகள், பட்டா மாற்றம், 23 வகையான சான்றிதழ் வழங்கப்படும் பணிகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் ஆதார் மையத்தை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் குமார், சுமதி, வருவாய்த்துறை பணியாளர்கள், விடுதி காப்பாளர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்