தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் - தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வெளிநடப்பு
புதிய சட்ட திட்ட விதிகளை மாற்றி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக உறுப்பினர்களில் சிலர் குற்றம் சாட்டினர்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. காலை தொடங்கிய இந்த கூட்டத்திற்கு தலைவர் முரளி ராமநாராயணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது புதிய சட்ட திட்ட விதிகளை மாற்றி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி உறுப்பினர்களில் சிலர், தீர்மானங்களுக்கு எதிராகவும், தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் முழக்கமிட்டனர்.
இதையடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.சந்திரசேகர், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.