தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது.

Update: 2023-07-05 18:29 GMT

வேலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர்கள் வாசு, ரேணு, மணிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்ட ஆலோசகர் பூவேந்தன் வரவேற்றார். வேலூர் நேஷனல் சிக்னல் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காட்பாடிசாலை, பழைய பஸ்நிலையம், அண்ணாசாலை, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று அண்ணா கலையரங்கம் அருகே நிறைவடைந்தது.

இதில், மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், மாநில பொருளாளர் பாண்டியன், துணை பொதுச்செயலாளர் ராஜாசிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிபந்தனையின்றி பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பின்னர் அண்ணா கலையரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்