தமிழக மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-08-08 00:30 IST

சங்கரன்கோவில்:

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழக மக்கள் நலக்கட்சியின் சார்பில் சங்கரன்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் தனராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயபாலன், சங்கரன்கோவில் வட்டார கிறிஸ்தவ ஊழியர் ஐக்கியத்தின் செயலாளர் மோசஸ் ராஜதேவன் மற்றும் போதகர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் தமிழக மக்கள் நலக்கட்சியினர் மற்றும் சங்கரன்கோவில் வட்டார கிறிஸ்தவ ஊழியர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைமை இடத்து செயலாளர் முத்துசாமி ஸ்டீபன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்