தேசிய அளவிலான கோ-கோ போட்டிக்கு தமிழக வீரர்கள் தேர்வு

தேசிய அளவிலான கோ-கோ போட்டிக்கு தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update:2023-09-30 23:58 IST

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் அகில இந்திய கோ-கோ போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில், உடற்கல்வி இயக்குனர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் திருமூர்த்தி, ரவி, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை தேர்வு செய்தனர். இந்த போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்திற்கு 9 பேர் என மொத்தம் 72 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்