ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் பிரதம மந்திரி சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஆறுகளில் 1 லட்சத்து 58 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது. ஆறுகளில் மீன் குஞ்சுகள் விடும் பணியின் தொடக்க நிகழ்ச்சி வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி ஆற்றில் மீன் குஞ்சுகளை விடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையில் மஞ்சள் பைகளை கலெக்டர் வினியோகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராம், பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்