பள்ளி, கோவில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்-கலெக்டரிடம் ெபாதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் பள்ளி, கோவில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-08-08 00:15 IST


ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் நாகூர்கனி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் சக்கரக்கோட்டை அப்துல்கலாம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் திரளாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் சக்கரக்கோட்டை முனியைய்யா கோவில் அருகில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி அருகில் அமைந்துள்ள இந்த கடையை அரசின் உத்தரவின்படி அகற்ற உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்த நிலையில் இதுவரை அகற்றப்படவில்லை. பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் இடையூறாக உள்ள இந்த கடையை அகற்றக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடைமுன் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக கடையை மூடுவதாக அறிவித்தனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக அந்த கடையை அகற்றிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்