டாஸ்மாக் கடையை உடைத்து 62 மது பாட்டில்கள் திருட்டு

ஆவாரம்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் 62 மது மதுபாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது.;

Update:2023-07-16 01:30 IST

கோவை வெள்ளாளப்பட்டி அண்டக்காபாளையத்தை சேர்ந்த வர் சஞ்சய் காந்தி (வயது 43). இவர் ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்றுமுன்தினம் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது மதுப்பாட்டில்கள் கலைந்து இருந்தது.

உடனே அவர் கடையில் இருந்து மதுபாட்டில்களின் இருப்பை சரிபார்த்தார். அப்போது ரூ.10 ஆயிரத்து 400 மதிப்புள்ள 62 மதுபாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


மேலும் அங்கு பொருத்தப் பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்