தொழில்நுட்ப கோளாறு: 120 பயணிகளுடன் இலங்கை செல்ல இருந்த விமானம் ரத்து

தொழில்நுட்ப கோளாறு: 120 பயணிகளுடன் இலங்கை செல்ல இருந்த விமானம் ரத்து.;

Update:2022-11-24 00:08 IST

மதுரை,

மதுரையில் இருந்து இலங்கைக்கு நேற்று மாலை 4.20 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் இலங்கை செல்வதற்காக 120 பயணிகள் ஏறி இருந்தனர். இந்த நிலையில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால், விமானம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், விமானத்தில் உள்ள எந்திர தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய திருச்சியில் இருந்து உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது. நீண்ட நேரமாகியும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், நாளை (அதாவது இன்று) புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விமான நிறுவனத்தின் சார்பில் அந்த 120 பயணிகளும் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்