விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

ஆம்பூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-09-27 23:30 IST

ஆம்பூர்

ஆம்பூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூரை அடுத்த மாதனூர் அருகே மேலூரை சேர்ந்தவர் சாமந்தி (வயது 19). இவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். சாமந்தி தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். சாமந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் திடீரென விஷம் குடித்து சாமந்தி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்