மயிலம் அருகேபள்ளி மாணவியை தாக்கிய வாலிபர் கைது

மயிலம் அருகே பள்ளி மாணவியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;

Update:2023-08-07 00:15 IST


மயிலம்,

திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து, சிறுமி வீட்டுக்கு சென்றார். அப்போது மயிலம் அடுத்த கருணாவூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் பிரசாந்த்(வயது27) என்பவர் சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர், பிரசாந்த்திடம் தட்டிக் கேட்ட போது, அங்கு கோவிலில் இருந்த சூலாயுதத்தை எடுத்து அவர்களை குத்துவதற்கு வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை மயிலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரசாந்த்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்