ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் துறை போலீசார் கரூர் கள்ளுப்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்குரிய ஒரு இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 20 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் ரேஷன் அரிசியை பதுக்கியதாக நாமக்கல்லை சேர்ந்த அருணகிரி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அங்கிருந்த ரேஷன் அரிசிகள், மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டன.