கமுதி,
கமுதி அருகே அபிராமம் பஸ் நிலையத்தில் இருந்து பார்த்திபனூர் சாலையில் உள்ள சலூன் கடை அருகே வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் அபிராமம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அபிராமம் அருகே தரைக்குடி கிராமத்தை சேர்ந்த பொன்முத்துராமலிங்கம்(வயது 22) என்பதும், அவர் 830 கிராம் கஞ்சா, வாள் வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.