கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;

Update:2023-10-12 05:24 IST

விஜயமங்கலம் அருகே உள்ள சரளை பகுதியில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வெல்லமலைபட்டி கன்னிமார்புரத்தை சேர்ந்த மாயி (வயது 34) என்பதும், அவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாயியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்