பொள்ளாச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை;

Update:2022-10-03 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கரியாஞ்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 20). தேங்காய் உரிக்கும்தொழிலாளி. இவர் கடந்த சில வாரங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து உள்ளார். இந்த நிலையில், ஸ்கூட்டர் ஒன்றை தவணை முறையில் வாங்கி உள்ளார். சரிவர வேலைக்கு செல்லாமல் ஸ்கூட்டர் வாங்கியதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால், மனவேதனை அடைந்த முருகேஷ் சம்பவத்தன்று ஆத்துமேடு பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை உடனடியாக மீட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்