வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
குடியாத்தம்
குடியாத்தம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தத்தை அடுத்த காக்கா தோப்பு மேல்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் ராதாகிருஷ்ணன் (வயது 33). கட்டிட தொழிலாளி. ராதாகிருஷ்ணனின் பெற்றோர் கார்த்திகேயபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். தற்போது ராதாகிருஷ்ணன் மட்டும் காக்காதோப்பு மேல்பட்டி ரோட்டில் வசித்து வருகிறார்.
நேற்று காலை இவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. பெற்றோர் அங்கு வந்து பார்த்தபோது கேபிள் டி.வி. வயரால் ராதாகிருஷ்ணன் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தாரா ஆகியோர் அங்கு சென்று ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.