மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

திருமருகல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.;

Update:2023-08-01 00:15 IST

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கேதாரிமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 36). இவர் சம்பவத்தன்று இரவு கேதாரிமங்கலம் காலனித்தெரு அருகில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்பிய போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்