கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.;

Update:2022-08-19 17:45 IST

சமயபுரம், ஆக.20-

சமயபுரம் போஜீஸ்வரர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக காலபைரவருக்கு பால், நெய், இளநீர், கரும்பு உள்ளிட்ட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து வடை மாலை சாத்தப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போஜீஸ்வரர் மற்றும் ஆனந்தவல்லி தாயாருக்கு தீபாரதனை நடைபெற்றது. இதேபோல், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்