போக்சோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கைது: ஐகோர்ட்டு மதுரை கிளை ஜாமீன் வழங்கல்

கன்னியாகுமரியைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேஸ்புக்கில் எதிர்க்கருத்து தெரிவித்தவரின் 16 வயது மகளின் புகைப்படத்தை எடுத்து ஆபாச கருத்துடன் விமர்சனம் செய்தார்.;

Update:2026-01-27 18:09 IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவு மாவட்ட துணைத் தலைவரான சுரேஷ்குமார் என்பவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேஸ்புக்கில் எதிர்க்கருத்து தெரிவித்தவரின் 16 வயது மகளின் புகைப்படத்தை எடுத்து ஆபாச கருத்துக்களுடன் விமர்சனம் செய்தார். இது தொடர்பான வழக்கில் சுரேஷ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து ஜாமீன் கோரி ரமேஷ்குமார் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, “மனுதாரரின் கருத்துகள் மிக மோசமானதாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளது. எனினும், அவர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு, இனி இதுபோன்று வார்த்தைகளை பயன்படுத்தமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்