உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா

உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடந்தது.;

Update:2023-04-27 00:14 IST

அம்மாப்பேட்டை உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மாப்பேட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு உத்திராபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து அமுது படையல் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து மாலை மூலவர் உத்திராபதியாருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் உத்திராபதியார் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்