திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

Update: 2023-07-04 18:45 GMT

மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர். முன்னதாக கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக விசேஷ அபிஷேக ஆராதனையும், மகாபாரத கதை நிகழ்ச்சியும் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது. தொடர்ந்து இரவு அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்