மண்டு மாரியம்மன் கோவில் திருவிழா

மாரண்ட‌அள்ளியில் மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபட்டனர்.

Update: 2022-08-19 13:08 GMT

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த மண்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சனத்குமார நதியில் சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கடைவீதி வழியாக வந்தனர். தொடர்ந்து மண்டு மாரியம்மனுக்கு கும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்