ஆலய திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 161-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-09-03 11:07 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 161-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை மற்றும் வட்டார முதன்மை குரு டாக்டர் ஜோசப் ரவிபாலன் தலைமையில் தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா, சிதம்பரபுரம் பங்குத்தந்தை இருதயசாமி ஆகியோர் கொடியேற்றி மறையுரை வழங்கினர். கொடியேற்றம் நிகழ்ச்சியில் சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். 10-ம் திருநாளான 11-ந் தேதி காலை நடைபெறும் அன்னையின் தேர்ப்பவனியில் பல்வேறு சமய மக்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். மாலையில் நற்கருணை பவனி, மறையுரை, தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி பங்குத் தந்தை அந்தோனி பிரான்சிஸ் பிரதாப் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்