புவனகிரி அருகே திரவுபதியம்மன் தருமராஜா கோவில் கும்பாபிஷேகம்

புவனகிரி அருகே திரவுபதியம்மன் தருமராஜா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update:2022-09-11 22:12 IST

புவனகிரி, 

புவனகிரி அருகே பு.கொளக்குடி கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. அதன்பிறகு புனிதநீர் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கோபுர விமானம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்