திருச்செங்கோட்டில்ரூ.9½ லட்சத்துக்கு எள் ஏலம்

Update: 2023-03-01 19:00 GMT

எலச்சிபாளையம்:

நாமக்கல் விற்பனை குழுவின் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள், தேங்காய் பருப்பு, நிலக்கடலை பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் ஆமணக்கு ஏலம் நடந்தது.

5,897 கிலோ எள்ளானது ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்துக்கும், 480 கிலோ ஆமணக்கு ரூ. 33 ஆயிரத்துக்கும், 463 கிலோ துவரை பருப்பு ரூ.21 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

மேலும் 369 கிலோ பாசி பயிறு ரூ.28 ஆயிரத்துக்கும், 297 கிலோ தேங்காய் பருப்பு ரூ.23 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விளை பொருட்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ் கேட்டு கொண்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்