குன்றத்தூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து - வாகன ஓட்டிகள் அவதி
குன்றத்தூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.;
பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச் சாலையின் குன்றத்தூர் அருகே நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்த குப்பை கிடங்கில் இன்று மதியம் ஏற்பட்ட தீயானது மளமளவென வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடிக்கடி இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதால் குப்பைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.