திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர் தேர்வு

Update: 2023-01-11 16:07 GMT


கர்நாடகா மாநிலம் தார்வாட் ஹூப்ளி மாநகரில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை தேசிய இளைஞர் தினம் நடைபெறுகிறது. இந்த விழாவில் இளைஞர் ஆளுமை, மாநிலத்தின் கலாசாரம், தேசிய ஒருமைப்பாடு போன்றவை இடம்பெறுகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் இருந்தும் யூனியன் பிரதேசத்தில் இருந்தும் 1,000 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 150 மாணவ-மாணவிகள் தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியில் இருந்த 10 மாணவ-மாணவிகள் தேர்வாகியுள்ளனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவர் ரமேஷ் தேர்வாகி இருக்கிறார். இவர் கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாவட்டத்தில் இருந்து தேர்வாகி உள்ள ஒரே அரசு கல்லூரி மாணவர் இவர் ஆவார்.

கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, ஹரேஷ் பாண்டியா மற்றும் மாணவர்கள், ரமேசை வழியனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்