கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததற்கு மானாமதுரை யூனியன் கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததற்கு மானாமதுரை யூனியன் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.;

Update:2023-03-11 00:15 IST

மானாமதுரை

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததற்கு மானாமதுரை யூனியன் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

யூனியன் கூட்டம்

மானாமதுரையில் யூனியன் கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி சாந்தி, துணைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.முன்னதாக யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவுன்சிலர் முருகேசன் கூறும் போது:-

கீழபசலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசனேந்தல் சாலையை சீரமைக்க வேண்டும். கீழபசலை நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரை உடனே கட்டித் தர வேண்டும்.அதேபோல் எம்.கரிசல்குளம் பகுதியில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தலைவர் லதா அண்ணாதுரை:- அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்மாய் தூர்வார வேண்டும்

மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து:-

என்னுடைய வார்டுக்கு உட்பட்ட எஸ்.கரிசல்குளம் கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. அதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முடிவில் மேலாளர் தவமணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்