ஓடும் பஸ்சில்தான் ஏறுவோம் என அடம்பிடித்த கல்லூரி மாணவர்கள்

ஒடுகத்தூர் அருகே ஓடும் பஸ்சில்தான் ஏறுவோம் என்று கல்லூரி மாணவர்கள் அடம்பிடித்ததால் டிரைவர் ½ மணி நேரம் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.;

Update:2023-09-10 00:27 IST

அடம்பிடித்த மாணவர்கள்

ஒடுகத்தூரை அடுத்த அகரம் அரசு கலைக்கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, ஆம்பூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்கள் கல்லூரிக்கு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல மாலை 3 மணி அளவில் கல்லூரி விடப்பட்டது. அப்போது ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ஏறினர். அவர்களில் சில மாணவர்கல் பஸ் நிற்கும்போது ஏறாமல், ஓடும் பஸ்சில் தான் ஏறுவோம் என்று அடம்பிடித்து நின்றனர்.

பஸ் நிறுத்தம்

இதனால் நீங்கள் பஸ்சில் ஏறினால் தான் நான் பஸ்சை எடுப்பேன் என்று டிரைவர் பஸ் ஓட்டவில்லை. இதனால் அரை மணி நேரம் பஸ் அங்கேயே நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி அரை மணி நேரத்திற்கு பின்பு அனைத்து மாணவர்களும் பஸ்சில் ஏறிய பிறகு பஸ் புறப்பட்டு சென்றது.

தினமும் இவ்வாறாக அடம்பிடிக்கும் கல்லூரி மாணவர்கள் மீது பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்